• Dec 26 2024

பிக்பாஸ் ஜோவிகா வீட்டிற்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த முக்கிய பிரபலம்- அடடே இவர் மறுபடியும் வந்திட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போன்றுதான் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தற்போதைய ஏழாவது சீசன் சொல்லவே வேண்டாம். போட்டியாளர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருகிறது. 

அதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது.பிரதீப் தான் இந்த சீசன் டைட்டில் வின்னராக வருவார் என்று ரசிகர்கள் நம்பி இருந்த நிலையில் கடைசியில் அவருடைய வெளியேற்றம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. 


அதுபோல ஏற்கனவே வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்திருக்கிறார்கள். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் பைனலுக்கு வருவார் என்று எதிர்பார்த்த ஜோவிதாவும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜோவிகா பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளார்.


இந்த நிலையில் ஜோவிகா,பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்காட் என்ட்ரியாக நுழைந்து அண்மையில் வீட்டை விட்டு வெளியேறிய ப்ராவோவை சந்தித்திருக்கின்றார். இது குறித்த புகைப்படத்தை வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement