• Dec 26 2024

விஜய் டிவியும் ஜீ தமிழும் ஒன்றாய் சேர்ந்த தருணம்.. ஆளை மயக்கும் போட்டோஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சீரியலுக்கு என்றே பெயர் போன சேனல்கள்  தான் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி. இவற்றில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே தனித் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக காணப்படுகின்றது. ஏனைய சீரியல்களைப் போல் அல்லாமல் வாரா வாரம் இதன் கதைக்களம் மாறுபட்ட  ரீதியில் ஒளிபரப்பாகுவதால் இதற்கு பெரும் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.


அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலும் பிரபலமாக காணப்படுகின்றது. இந்த சீரியலில் மீனாட்சியின் மூன்று பிள்ளைகளும் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவர்களின் விடா முயற்சி போன்றவை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி ஆன மீனாவும், மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் நாயகியான சக்தியும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள் .இது தற்போது வைரலாகி வருகின்றது.

இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியும் ஜீ தமிழும் ஒன்றாய் சேர்ந்து இப்படி அழகில் கொள்ளுறாங்களே என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement