• Dec 27 2024

நான் உனக்கு அம்மாவே இல்லை.. பிக்பாஸ் தனலட்சுமியை விரட்டிய தாய்? சட்டப்பூர்வ நோட்டிஸ் வேறு..

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் ஒருவர்தான் தனலட்சுமி. இவர் அந்த நிகழ்ச்சியில் கோபம், சண்டை, வெறுப்பு, பிடிவாதம் என பிக் பாஸ் வீட்டையே புரட்டி எடுத்திருந்தார்.

டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தனலட்சுமி. ஒரு கட்டத்தில் டிக் டாக் ரத்து செய்யப்பட,  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். விதம் விதமான கெட்டப்புகளை போட்டு நடிப்பதில் அவர் கை தேர்ந்தவராக காணப்பட்டார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே, அதில் பங்கு பற்றிய தனலட்சுமி, ஆரம்பத்தில் அனைவருடனும் சண்டை போட்டு வந்தார். எனினும் அந்த ஆட்டத்தில் நிலைக்காமல் வெளியேறியிருந்தார்.  பிக் பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமிக்கு விக்ரம் ஆதரவு தெரிவிக்க,  இறுதியில் வெளியேறிய தனலட்சுமி அஸிமுக்கு ஆதரவாக மாறி இருந்தார்.


இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மா அவரை எதிர்த்து சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், எனது அம்மாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று எனது அம்மா சட்டபூர்வமாக கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.  


மேலும் அவரது அம்மாவின் புகைப்படத்தை எங்கும் பயன்படுத்தக் கூடாது. அம்மாவின் பெயரை எங்கும் சொல்லக்கூடாது, வரவும்  கூடாது என அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் தற்போது அவருக்கும் அவரது அம்மாவுக்கும் என்ன பிரச்சனை? இவ்வாறு முடிவெடுக்க என்ன காரணம் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement