• Dec 25 2024

பாக்கியாவுக்கு வந்த புது பிரச்சினை.. பார் கடை ஓனர் வைத்த ஆப்பு!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செழியன் அப்செட்டா இருப்பதை பார்த்த பாக்கியா என்ன ஆச்சு என்று கேட்க, பிசினஸ் மீட்டிங் பத்தி யோசிச்சு கொண்டு இருக்கிறேன் என்று சமாளிக்கிறார். 

இதை தொடர்ந்து பாக்கியா ஈஸ்வரி பார்த்து வருவதாக சொல்ல, எதுக்கு அந்த திமிரு புடிச்சவள பாக்க போற என்று ராமமூர்த்தி சொல்லுகிறார். அதற்கு நீங்க அத்தையை பார்ப்பதற்காக வாசல்ல போய் நிக்கிறீங்க தானே என்று சொல்ல, அது போஸ்ட்மேனை பார்க்க என்று சொல்லுகிறார். அதற்கு போஸ்ட்மேன் விடியவே வந்துட்டு போயிட்டாரு நீங்க அத்தையை பார்க்க தான் டெய்லி வாசல்ல போய் நிக்கிறீங்க என்று ராமமூர்த்தியை மடக்குகிறார் பாக்யா.

அதன்பின்பு ஈஸ்வரி கோயிலில் இருக்க, பாக்கியா அங்கே சென்று உங்களுக்கு பிடிச்ச பொங்கலும் வடையும் செய்து வந்திருக்கேன் என்று சொல்ல, முதலில் வேண்டாம் என்று மறுக்கிறார். மேலும் கோபியை விட்டுக் கொடுத்து பேசாமல் அவர் தன்னை நன்றாக பார்ப்பதாக சொல்லுகிறார். பாக்யா கிளம்பி போனதும் வடையை எடுத்து சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு என ருசித்து சாப்பிடுகிறார் இதை பார்த்து பாக்கியா  கண்கலங்குகின்றார்.


இதை அடுத்து மாமாவும் அங்க கஷ்டப்படுறார். நீங்களும் இங்க  கஷ்டப்படுறீங்க பேசாம வீட்ட வாங்களேன் என்று கேட்க, அது அப்படி வர முடியும் நான் கோபிக்காக தானே வந்தேன் கொஞ்ச நாள் இருந்துட்டு வாரேன் என்று சொல்லுகிறார். பிறகு பாக்கியாவும் ஈஸ்வரியும் கொஞ்சம் சிரித்து பேசுகின்றார்கள். அதன் பின்பு ஒன்றாக வீட்டுக்கு செல்ல, வழியில் கோபி பார்த்து ஈஸ்வரியை காரில் அழைத்துச் செல்கிறார்.

இறுதியாக பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு செல்ல அங்கு அருகில் பார் பூட்டப்பட்டு இருப்பதை பார்க்கின்றார். உள்ளே சென்று செல்வியிடம் பார் பூட்டி இருக்குது என்னாச்சு என்று பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்த பார் கடை ஓனர் நீங்கள் ஆசைப்பட்டது போலவே நடந்துடுச்சு.. யாரோ கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க அதனால கடையை பூட்டியாச்சு என்று சொல்கிறார்.

மேலும் நீங்க தான் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கீங்களோ என்று சந்தேகமா இருக்கு என்று சொல்லுகிறார். அதற்கு பாக்கியா நான் ஏன் கம்ப்ளைன்ட் பண்ண? நீங்க தரவேண்டிய பாக்கி இருக்கு அத முதல் தாங்க என்று சொல்ல, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நீங்கதான் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கீங்க என்று சொல்லி செல்கிறார் பார் கடை ஓனர். இதனால் காசு வாங்காம விட மாட்டேன் என சொல்கிறார் பாக்கியா.

Advertisement

Advertisement