• Dec 26 2024

இன்று மாலை வெளியாகிறது 'வாழை' படத்தின் அடுத்த பாடல்.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை ஒரு மாற்றத்திற்கான சாவியாய் பயன்படுத்தும் இயக்குனர்களில் முதன்மையாவர் இயக்குனர் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த மாரி செல்வராஜ் தனுஷின் 'கர்ணன்' திரைப்படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக அறியப்பட்டார்.


தொடர்ந்து சமூக கருத்துகளுடனான கதையை சிறந்த நடிகர் தேர்வுடன் இயக்கும் மாரி செல்வராஜ் இறுதியாக வடிவேல் மற்றும் உதயநிதி ஸ்டாலினை வைத்து 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கி அதை வெற்றிப்படமாகவும் அமைத்துக்கொண்டார்.

வாழை படத்தின் அடுத்த பாடல் -Vaazhai 3rd single Otha Satti Soru

தற்போது தனது தயாரிப்பிலேயே 'வாழை' என்னும் படத்தை எடுத்து முடித்திருக்கும் மாரி செல்வராஜ் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வேலைகளில் சரியான பிஸியாக உள்ளார்.இந்நிலையில் தற்போது படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image

அதாவது 'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள இத்தருணத்தில் படத்தின் மூன்றாவது பாடலான 'ஒத்தச் சட்டி சோறு...' பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.'வாழை' படமானது வருகிற 23 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement