• Dec 25 2024

vj.பார்வதியிடம் அசிங்கமாக பேசிய நபர்... நீ மூடிட்டு கிளம்பு, பெண்களை கவர்ச்சி பொருளாத்தான் பாப்பீங்களா... நெட்டிசன்களை விட்டு விளாசிய VJ பார்வதி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல தொகுப்பாளரான விஜே பார்வதி ஆனந்த விகடனில் மாணவர் நிரூபராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் . சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் விஜே பார்வதியின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து லைக்,கமெண்ட்ஸ் என்று  மலை போல் குவித்து வருகின்றனர்.


விஜே பார்வதி பத்திரிகை மற்றும் தொடர்பாடலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தன் கல்லூரியிலும், வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலும் செய்தியாளராக இவர் பணியாற்றி உள்ளார். பின்னர் ஆர்ஜேவாகவும் இருந்து இருக்கிறார். பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் மற்றும் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.


யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார். அண்மையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் ஓவராக நடந்து கொண்டார் என பல விமர்சனங்கள் வந்தாலும், மிரட்டலான அனைத்து டாஸ்குகளையும் அவர் துணிச்சலுடன் செய்ததால் பாராட்டை பெற்றார்.


ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராமில் நேரலையிலும் பேசி வருகிறார். இதனால், இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். கண்ணாடி போட்டுக்கொண்டு அழகாக வலம் வரும் இவரை ரசிகர்கள் மியாக கலிபா என்று வர்ணித்து வந்தாலும், ஒரு சிலர் அவரை இணையத்தில் வம்பு இழுத்து வருகின்றனர்.


அதுபோலத்தான் இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர், விஜே பார்வதியிடம் அசிங்கமான கேள்வி கேட்டுள்ளார். அதாவது ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ பிரபலமாகிடுவே என்று கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டுள்ளார். இந்த பார்த்து கடுப்பான விஜே பார்வதி நீ மூடிட்டு கிளம்பு, பெண்களை எப்போதும் ஒரு காமப்பொருளாகவும், கவர்ச்சி பொருளாகவும் தான் பாப்பீங்களா? இதற்கு நாங்க போடும் ஆடைகள் அப்படி இருப்பது தான் காரணம் என்று சொல்கிறீர்கள்.இந்த மனநிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை.


ஆனால், நான் என்ன உடை போடவேண்டும் என்று நீ எனக்கு சொல்லத்தேவையில்லை. பெண்கள் கவர்ச்சிக்காக மட்டும் தான் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றுங்கள் என்று பார்வதி நெட்டிசனை விளாசினார். இவர் விளாசிய விளாசலில் அந்த நெட்டிசன்ஸ் ஓடியே போய்விட்டார்.


இன்ஸ்டாகிராமில், கணிசமான பாலோவர்களை வைத்து இருக்கும் விஜே பார்வதி கடந்த சில நாட்களாக  வழக்கமாக கண்ணாடி அணிந்து கொண்டு வலம் வரும் இவர் தற்போது கண்ணாடி இல்லாமல் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். இந்த கெட்டப் சில ரசிகர்களுக்கு பிடித்து இருந்தாலும், சிலருக்கு இது பிடிக்கவில்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இவர், கறுப்பு உடையில் தொடை அழகை காட்டி பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது . 

Advertisement

Advertisement