• Dec 26 2024

எனக்கு எதிரா மிகப்பெரிய சதி நடக்குது.! முன்னாள் மனைவியை குற்றம் சாட்டிய பாலா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா சமீபத்தில் அவருடைய முன்னாள் மனைவி வழங்கிய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த நடிகர் பாலா, தன்னை  மிகப்பெரிய மோசடி வலையில்  சிக்க வைக்க முயற்சி நடக்கின்றது. இது தொடர்பில் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகரான பாலா அஜித் நடித்த வீரம் படத்தில் அவருடைய தம்பியாக நடித்திருந்தார். தமிழ், மலையாளம் போன்றவற்றில் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார். இவர் பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.


இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற பெண்ணை நடிகர் பாலா இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பாலாவின் மகள் அவந்திகா எனது அம்மாவை குடித்து விட்டு அடித்துக் கொடுமைப்படுத்தினார் என்று தனது அப்பா மீது குற்றம் சாட்டியிருந்தார். அதன் பின்பு பாலாவின் மூத்த மனைவி தன்னையும் தனது மகளையும் வழிமறைத்து தொந்தரவு செய்வதாக பாலா மீது புகார் கொடுத்திருந்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறான நிலையில் தற்போது வீடியோ வெளியிட்ட நடிகர் பாலா கூறுகையில், தன்னை தனது முன்னாள் மனைவி பெரிய சிக்கலில் சிக்க வைக்க திட்டம் போட்டதாக கூறியுள்ளார். மேலும் தனது வீட்டுக்கு அதிகாலை 3. 45 மணிக்கு கைக் குழந்தையுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் வந்தார்கள். அந்த ஆண் பெல்லை அடித்து விட்டு கதவு திறக்காததால் இருவரும் சென்று விட்டனர். 

அந்த நேரத்தில் அந்தப் பெண்  கை குழந்தையுடன் வீட்டுக்கு வர காரணம் என்ன? என்னை ஏதோ ஒரு பெரிய மோசடியில் சிக்க வைக்க தான் முயற்சி நடக்கின்றது. இது தொடர்பில் ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்திற்கு வீடியோவை அனுப்பி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement