• Dec 25 2024

இந்த மூணும் மோசமான குரங்குகள்.. So funny..!! வலைப்பேச்சு டீமை அசிங்கப்படுத்திய நயன்!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக காணப்படும் நயன்தாரா, சமீபத்தில் தனுஷை ஜெர்மன் பாஷையில் திட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், சினிமா மற்றும் பிரபலங்கள் பற்றிய கிசுகிசு தகவல்களை வெளியிட்டு வரும் வலைப்பேச்சு யூடியூப் சேனலின்  பத்திரிகையாளர்கள் மூவரையும் நடிகை நயந்தாரா குரங்குகள் என விமர்சித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். தற்பொழுது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.

அதாவது, நயன்தாராவின் திருமண டாக்குமெண்ட்ரி விவகாரத்தில் இடம்பெற்ற பிரச்சனையின் போது நயன்தாரா மீது தான் தப்பு தனுஷ் மீது தப்பு இல்லை என்ற வகையில் வலைப்பேச்சு அந்தணன் தகவல் வழங்கியிருந்தார். இந்த காரணத்தினாலே நயன்தாரா அவர்கள் மீதுள்ள கோபத்தில் இவ்வாறு பேசியதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

d_i_a

அதன்படி நயன்தாரா வழங்கிய பேட்டியில், எல்லாருமே பணம் சம்பாதிப்பதை தான் நோக்காக கொண்டுள்ளோம்.. நானும் தான்.. தனுஷும் தான்.. ஒவ்வொரு பிரபலங்களும் பணம் சம்பாதிப்பதை தான் நோக்காக கொண்டுள்ளனர். 


ஆனால் பிறரை பற்றி தப்பா பேசியே பணம் சம்பாதிக்கும் மூன்று குரங்குகள் உள்ளனர் என்று வலைப்பேச்சு டீமில் உள்ள அந்தணன், பிஸ்மி மற்றும் சக்திவேல் உள்ளிட்ட மூவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


அதாவது, கெட்டதை பார்க்காதே.. கெட்டதை பேசாதே.. கெட்டதை கேட்காதே.. என மூன்று குரங்குகள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் கெட்டதை பார்.. கேட்டதை கேள்.. கெட்டதை மட்டுமே பேசு என சொல்லும் மூன்று மோசமான குரங்குகள் தான் வலைப்பேச்சு டீம் என கூறியுள்ளார்.

அவர்கள் 50 வீடியோ போட்டு இருந்தால் அதில் என்னை பற்றி மட்டுமே 45 வீடியோவில் பேசியிருப்பார்கள். அதற்கு காரணம் என்னை பற்றி பேசினால் தான் வியூஸ் வரும். அதை வைத்து காசு உழைக்கலாம்.. எப்படியோ என்னைப் பற்றி தப்பா பேசி சம்பாதித்து சாப்பிட்டால் கூட அது எனக்கு சந்தோஷம்தான் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுவரையில் பொது வெளியில் யாரையும் பற்றி பேசுவதற்கு யோசிக்கும் நயன்தாரா, சமீப காலமாகவே தன்னை எதிர்ப்பவர்களை தானும் இறங்கி விளாசி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement