• May 23 2026

அவனுக்கு இதுதான் முதல் தடவை.! அனுமன் கோயிலுக்கு நாயுடன் சென்ற த்ரிஷா.! வெடித்த பூகம்பம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் விஜயின் விவாகரத்து வழக்கு தொடர்பான தகவல்களில் சிக்கிப் பேசுபொருளாக இருந்து வருகிறார். அதிலும் அவர் விஜயுடன் இணைந்து திருமண விழாவிற்குச் சென்றது, இந்த விவகாரத்திற்கு மேலும் வலுச்சேர்த்தது.

சமீப காலமாகவே திரிஷாவை சுற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாகவே காணப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரை பெயர் குறிப்பிடாமல் கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்குப் பிறகு, விஜய்-சங்கீதா விவாகரத்து மனுவில் நடிகை ஒருவருடன் விஜய்க்கு தவறான உறவு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. அது திரிஷாதான் என சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாய்ப் பரவின. அந்த நேரத்தில் விஜயும் திரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்விற்குச் சென்றது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.

கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் திரிஷா, தற்போது வரையில் தனியாகவே காணப்படுகிறார். 40 வயதைக் கடந்த போதும் அவர் தனக்கென ஒரு துணையை தேடாமல், தன்னுடைய நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் அடிக்கடி வெளியிடுவார்.


இந்த நிலையில், சமீபத்தில் அனுமன் கோயிலுக்குச் சென்ற திரிஷா தன்னுடைய செல்லப் பிராணியையும் அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் பகிர்ந்து, தன்னுடைய செல்லப் பிராணி முதல் முறையாக கோயிலுக்கு வந்துள்ளதாகப் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், செல்லப் பிராணியை கோயிலுக்கு அழைத்துச் செல்லலாமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். பக்தர்களும் கோயிலுக்கு எப்படி ஒரு நாயை அழைத்துச் செல்லலாம் என்று கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலர் கோயிலுக்கு நாயை அழைத்துச் செல்வதில் எந்தத் தவறும் இல்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement