தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா மட்டுமன்றி கார் மற்றும் பைக் ரேஸிங்கிலும் கலக்கி வருகின்றார். சமீபத்தில் துபாயில் இடம்பெற்ற 24 மணிநேர கார் ரேசிங்கில் இந்திய அணி சார்பில் கலந்து மூன்றாம் இடத்தை பெற்றார்.
மேலும் இவருக்கு தற்போது இந்திய அரசாங்கம் பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் பின்னர் அஜித் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். குறித்த பேட்டியில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த காரணத்தை கூறியுள்ளார்.
குறித்த நேர்காணலில் "என் ஆரம்ப கால படங்கள் பலவற்றில் பெண்களை கேலி செய்யும் காட்சிகள் இருந்தன. நான் அவ்வாறான படங்களில் நடித்ததை எண்ணி வருத்தம் அடைகின்றேன். என் தவறை சரி செய்வதற்காகவே நேர் கொண்ட பார்வையில் நடித்தேன். பெண்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் உரிய முறையில் அளிக்க வேண்டும் " என கூறியுள்ளார்.
Listen News!