விஜய் டிவியில் சுவாரஷ்யமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் போட்டியாளர்கள் தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. எந்தெந்த போட்டியாளர்கள் நாமினேட் ஆகியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
விஜய் டிவி வெளியிட்ட முதல் ப்ரோமோவில் சரியான காரணங்களுடன் போட்டியாளர்கள் 2 நபர்களை தெரிவு செய்து கூறினார்கள். அதனடிப்படையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் இந்த வர நாமினேஷன் போட்டியாளர்களை அறிவிக்கிறார். அதில் அன்ஷிதா, ஜெப்ரி, ராணவ், ஜாக்குலின், மஞ்சுரி, விஷால் மற்றும் பவித்ரா தெரிவு செய்யபட்டுள்ளனர். அதில் 5 வோட்டுகள் பெற்று அன்ஷிதா நாமினேட் லிஸ்டில் முதலில் இருக்கிறார்.
மேலும் இந்த முறை அருண் பெயர் சொல்லப்படவில்லை இதனை கேட்ட மற்ற போட்டியாளர்கள் கைதட்டி சிரிக்கிறார்கள், அத்தோடு சவுந்தர்யா எழுந்து டான்ஸ் ஆடுகிறார். முத்து அவரை அமைதியாக இருக்குமாறு சொல்கிறார். இத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இந்நிலையில் யார் இந்த வாரம் மக்களால் வெளியே அனுப்பப்படுவார் என்று வார இறுதியில் தான் தெரியும் எனவே பொறுமையாக இருந்து பார்ப்போம்.
Listen News!