• Dec 26 2024

அக்‌ஷய் குமாரை நம்பி குதித்த டைகர் ஷ்ராஃப்... இப்படியும் நடக்குமா? வைரல் வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

55 வயதான அக்ஷய் குமார், கனடா குடியுரிமையை பெற்றிருந்த நிலையில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வரவே இந்திய  குடியுரிமையும் பெற்றுள்ளார்.

1990 ஆம் ஆண்டு கால கட்டங்களில் இவர் நடித்த அதிரடி படங்களாக கிலாடி, மோஹ்ரா  மற்றும் சப்ஸே படா கிலாடி ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் நகைச்சுவை படங்களிலும் நடித்துள்ளார்.


தான் நடித்த திரைப்படங்களின் பிரபலத்திற்காகவும் தனது நடிப்பிற்காகவும் பல விருதுகளை வென்றுள்ளார். ஃபிலிம்பேர் சைமா பல விருது அமைப்புகளின் கீழ் பல விருதுகளை வென்றுள்ளார். அத்துடன் 2009 ஆம் ஆண்டு அக்ஷய் குமார் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.


மேலும், அண்மையில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் இணைந்து ஆடியோ பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆனது.

இந்த நிலையில் அக்ஷய் குமார் டைகர் ஷ்ராஃப் இணைந்து செய்த ரீல்ஸ் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement