• Dec 26 2024

அட்ரா சக்க... சிறகடிக்க ஆசை சீரியலுக்கு தோனியும் ஃபேன்ஸ்- ஆ? யார் கூட போட்டோ எடுத்துருக்காரு பாருங்க..

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் காணப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் சாதாரண வீட்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கதைக்களத்தை நகர்த்திச் செல்கிறது.

அதன்படி மூன்று ஆண் பிள்ளைகளுக்கு தாயான விஜயா, தனக்கு வந்துள்ள மருமகள்களுக்கு இடையில் வேறுபாடு பார்ப்பதும், ஏழை வீட்டுப் பெண்ணான மீனாவை தினமும் அசிங்கப்படுத்துவதை வேலையாகவும் கொண்டுள்ளார்.


வீட்டில் ஸ்ருதி, ரோகிணியை தொடர்ந்தும் சிறப்பாக கவனித்து வந்த விஜயா, இன்றைய தினம் இடம்பெற்ற எபிசோட்டில் ரோகிணியை கண்டமாதிரி மிரட்டுகிறார். இதனால் இனிவரும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக செல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த சீரியலில் முத்துவின் பாட்டியாக நடிப்பவர்தான் நடிகை ரேவதி. இவரும் விஜயாவுக்கு சரியான மாமியாராகவும், மீனாவை ஆதரிக்கும் ஒரு நபராகவும், அண்ணாமலை, முத்து மேல் மிகுந்த பாசம் கொண்ட ஒருவராகவும் இந்த சீரியலில் வலம் வருகிறார்.


இந்த நிலையில், அண்மையில் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியோடு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement