• Oct 26 2024

’கோட்’ பாடல் வெளியாகும் அரை மணி நேரத்திற்கு முன் அஜித்தின் சம்பவம்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அஜித்தின் சம்பவம் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு பக்கம் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் பாடல்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. ஸ்பார்க் என்ற டைட்டிலில் வெளியாக இருக்கும் இந்த பாடல் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி டூயட் பாடல் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலை 6:00 மணிக்கு ’கோட்’ பாடல் வெளியாக இருக்கும் நிலையில் மாலை 5.32 மணிக்கு அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் தல தளபதியின் படங்கள் அப்டேட் வெளியாக இருப்பதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisement