• May 17 2025

விஜயாவை தாறுமாறாகப் பேசிய மீனா..! இனி வாய் திறக்கவே மாட்டாங்க போலயே..! டுடே எபிசொட்.!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து அருண் வீட்ட போய் குடிச்சிட்டுக் கத்திக் கொண்டிருக்கிறதை சத்தியா மீனாவுக்குச் சொல்லுறார். அதைக் கேட்ட மீனா இவரு ஏன் தான் இப்படி எல்லாம் பண்ணிக் கொண்டிருக்கிறாரோ தெரியல என்கிறார். இதனை அடுத்து சத்தியா தான் போய் கூட்டிக் கொண்டு வரவா என்று கேக்கிறார். அதுக்கு மீனா அது பொலீஸோட வீடு என்று வேற சொல்லுற உனக்கு ஏதாவது பிரச்சன வந்திரப் போகுது நீ அங்க இருந்து போ நான் பாத்துக்கிறேன் என்கிறார்.

இதனை அடுத்து முத்து வீட்ட வந்து என்ன மீனா இன்னும் தூங்கலையா என்று கேக்கிறார். அதுக்கு மீனா நீங்க நிதானமா இல்ல என்றது பாக்கவே தெரியுது பிறகு ஏன் நிதானமா இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க என்று கேக்கிறார். அதனைத் தொடர்ந்து மீனா முத்துவப் பாத்து எதுக்கு அருண் வீட்ட போய் சண்டை பிடிச்சுக் கொண்டு வந்தனீங்க என்று கேக்கிறார்.


அதுக்கு முத்து கார் போனது எனக்கு ரொம்பவே கவலையா இருக்கு அதனால தான் குடிச்சன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா எங்களுக்கும் தான் நிறைய கவலை இருக்கு அதுக்காக நாங்க என்ன குடிச்சுக் கொண்டா இருக்கிறோம் என்று கேக்கிறார். மேலும் நீங்க அருண் வீட்ட போய் பிரச்சன பண்ணி சின்னப் பிரச்சனையா பெரிய பிரச்சனையா மாத்தியிருக்கீங்க என்று சொல்லுறார்.

மறுநாள் முத்து மீனாவுக்காக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கார். அதைப் பார்த்த விஜயா நீ நினைச்ச மாதிரியே முத்துவ மாத்திட்ட என்று சொல்லுறார். மேலும் முத்துவுக்கு இந்த வேலை தான் சரி எவ்வளவு அழகா வீட்டு வேலை செய்யுறான் பாத்தீங்களா என்று அண்ணாமலை கிட்ட சொல்லுறார். இதைக் கேட்ட மீனா போதும் நிறுத்துங்க சும்மா என்னதுக்கு கத்திக் கொண்டிருக்கீங்க என்று விஜயாவப் பாத்துச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement