• Dec 26 2024

இணையத்தை கலக்கும் வரலட்சுமியின் திருமண போட்டோஸ்!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங்கான விடயம் என்றால் அது வரலட்சுமியின் திருமண கொண்டாட்டங்கள் தான். நடிகை வரலட்சுமி நிக்கோலாய் சத்தேவ் என்ற தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணத்திற்கு வரலட்சுமி வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மகளின் விருப்பப்படியே அவர்களுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக செய்து முடித்து இருந்தார் நடிகர் சரத்குமார்.

ஆனாலும் வரலட்சுமிக்கு இது முதலாவது திருமணம் என்றாலும் அவர் தற்போது திருமணம் செய்த நிக்கோலாய் சத்தேவ்க்கு இரண்டாவது திருமணம். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பதோடு அவருக்கு 16 வயதில் மகளும் உள்ளார்.


எனினும் வரலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரலட்சுமிக்கு தங்கத்தில் கொலுசு, வைரத்தில் சேலை, 200 கோடி ரூபாய்க்கு சொத்து என அனைத்தையும் வாரி இறைத்துள்ளார் நிக்கோலாய்.

இந்த நிலையில், தற்போது தாய்லாந்தில் இடம் பெற்ற வரலட்சுமியின் திருமண கொண்டாட்டப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளன. இதுவரையில் வரலட்சுமியின் திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை என கவலைப்பட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement