• Dec 26 2024

இப்படி மோசம் பண்ணிட்டாங்களே அந்த பெண் இயக்குனர்.. வருத்தத்தில் ‘ஜெயிலர்’ பட நடிகர்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தஜெயிலர்திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்த வசந்த் ரவி, பெண் இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்த நிலையில் அந்த இயக்குனர் செய்த செயலால் அவர் மிகவும் வருத்தப்பட்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ட நாள் முதல்’ ’கண்ணாமூச்சி ஏனடாஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரியா இயக்கத்தில்பொன் ஒன்று கண்டேன்என்ற படத்தில் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் நாயகன், நாயகிகளாக அசோக்செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி இருந்தது

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திரையரங்கில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென தற்போதுபொன் ஒன்று கண்டேன்படம் தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாக இருப்பதாக புரமோ வெளியாகியுள்ளதை பார்த்து வசந்த் ரவி உட்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



ஒரு படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டுமா அல்லது ஓடிடியில், தொலைக்காட்சியில் வெளியிட வேண்டுமா என்பது முழுக்க முழுக்க தயாரிப்பாளரின் உரிமை என்றாலும், இந்த படத்திற்காக நாங்கள் மிகுந்த அளவில் உழைத்து உள்ளோம். எங்களிடம் ஒரு வார்த்தை மரியாதைக்காகவாது டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாக கூறி இருக்கலாம், குறைந்தபட்ச மரியாதையாவது எங்களுக்கு கொடுத்திருக்கலாம் என்று வசந்த ரவி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்

நாங்கள் நடித்த படம் ஒன்று நேரடியாக டிவியில் வெளியாகிறது என்பதை நாங்களே புரமோவை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை மிகவும் வருத்தத்திற்கு உரியது என்றும் அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு குறைந்தபட்சம் மரியாதையாவது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கொடுக்க வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது ஆறுதல்களை தெரிந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement