சரோஜா, மங்காத்தா என வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் வெங்கட் பிரபு. இவர் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் அஜித்தின் கேரியருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
அதன் பின்பு வெங்கட் பிரபுவுக்கு மவுசும் அதிகரித்தது. எனினும் இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்கள் ஒன்றும் ஹிட் கொடுக்கவில்லை.
d_i_a
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படம் வெளியானது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, மைக் மோகன், சினேகா, ஜோகி பாபு என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தார்கள். ஆனாலும் கோட் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
கோட் திரைப்படத்தில் ஏகப்பட்ட டெக்னாலஜிகளை கையாண்டிருந்தார் வெங்கட் பிரபு. மறைந்த விஜயகாந்தின் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டிருந்தது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான சின்ன சின்ன கண்கள் என்ற பாடலுக்கு உயிரிழந்த பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் வெங்கட் பிரபு. இந்த தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது. அதன்படி அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
அதற்குப் பிறகு வெங்கட் பிரபுவின் லிஸ்டில் சிவகார்த்திகேயனும் அஜித்தும் உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே பாலிவுட்டில் ஏ.ஆர் முருகதாஸ், அட்லீ என ஒவ்வொருவரும் அறிமுகமாகி வரும் நிலையில் தற்போது வெங்கட் பிரபுவும் அக்ஷய் குமாரை வைத்து படம் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!