வடசென்னை, காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட படங்களை தயாரித்து பல விருதுகளை வெற்றி பெற்ற இயக்குநர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் இறுதியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. ஆனாலும் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, அனுராக் காஷ்யப் இணைந்து, அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் 'பேர்ட் கேர்ள்' என்ற திரைப்படத்தை உருவாக்கினர். இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
குறித்த டீசரில் ரம்யா என்ற கேரக்டர் ஆண்களை தேடி அலைவது, பள்ளியில் தவறு செய்வது, பெற்றோரின் கண்டிப்பை எதிர்ப்பது, புகை பிடிப்பது, குடிப்பது, பல ஆண்களுடன் உறவில் இருப்பது என பல சர்ச்சைக்குரிய காட்சிகள் வரிசை கட்டி காட்டப்பட்டன. இதனால் இந்த படத்திற்கு சமூக வலைதள பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஒரு பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப்புக்கு கண்டனங்கள் வலுக்கத் தொடங்கின.
எனினும் சர்ச்சையை தூண்டும் விவாதங்கள் மூலம் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக 'பேட் கேர்ள்' திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFR) மதிப்புமிக்க NETPAC விருதை வென்றுள்ளது.
இந்த நிலையில், பிரபல பத்திரிக்கை விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் வெற்றிமாறன் பற்றி தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
அதில் அவர் கூறுகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் தோல்வியை தழுவியது. அதனை ஈடுகட்டும் வகையில் இப்படி ஒரு கேடுகெட்ட படத்தை எடுத்துள்ளார் .
விடுதலை 2 படத்தில் எதிர்பார்த்த காசு கிடைக்கவில்லை. கொஞ்சம் சிரமப்படுகின்றார். அதனால் இப்படிபட்ட 'பேட் கேர்ள்' கெட்ட பெண் என்ற படத்தை எடுத்து லாபம் சம்பாதிக்க முயற்சி செய்துள்ளார்.
எப்படி இருந்தாலும் இதன் இயக்குனர் தான் இல்லை என்பதால் தான் இப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். என்னதான் இருந்தாலும் நேர்மையாக செயல்பட்டால் தான் முன்னுக்கு வர முடியும் என பயில்வான் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!