• Dec 27 2024

ரேட்டிங்கை தக்க வைக்கணும்ன்னா.. மனோஜ்ஜை சிக்க வைக்கணும்.. இயக்குனருக்கு அட்வைஸ்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த நிலையில் இந்த வாரமும் முதல் இடத்தை பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் ’சிறகடிக்க ஆசை’ குழுவினர் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த சீரியல் இயக்குனருக்கு பார்வையாளர்கள் அறிவுரைகளை கூறி வருகின்றனர்.

'சிறகடிக்க ஆசை ’ சீரியலில் பெரும்பாலும் முத்து மற்றும் மீனா ஆகிய இருவருக்கு தான் சோதனை வருகிறது என்றும், நல்லவர்களாக இருக்கும் இருவரும் தொடர்ந்து சோதனைகளை எதிர்கொள்வதால் பார்வையாளர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது என்றும், ஆனால் அதே நேரத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி ஆகிய இருவரும் எந்த கெடுதல் செய்தாலும் அவர்களுக்கு எந்த விதமான சிக்கலும் வரவில்லை, அதற்கு பதிலாக நல்லதே நடந்து வருகிறது என்பதை ஆதங்கமாக தெரிவித்து வந்தனர்.

கடந்த வாரமும், இந்த வாரமும் தான் மனோஜ் மற்றும் ரோகிணி ஆகிய இருவருக்கும் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருந்ததை அடுத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பாக முத்து மீனா ஆகிய இருவரும் நகை எப்படி தொலைந்தது என்பதை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் சுவாரசியமாக இருந்தது என்றும் தெரிவித்து வருகின்றனர்.



இதேபோல் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் மனோஜ் - ரோகிணி  செய்யும் தவறுகளில் சிக்கிக் கொள்ளும் வகையில் சீரியலை கொண்டு சென்றால் கண்டிப்பாக டிஆர்பி ரேட்டிங் உயரும் என்றும், ஆனால் அதே நேரத்தில் முத்து மீனாவை மீண்டும் சோதனை செய்தால் டிஆர்பி குறையும் என்றும் இயக்குனருக்கு அட்வைஸ் மற்றும் அன்பு எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

பார்வையாளர்களின் இந்த அட்வைஸை ’சிறகடிக்க ஆசை’ சீரியல் இயக்குனர் ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement