• Dec 28 2024

காதல் கணவருடன் ரொமாண்டிக் லுக் கொடுக்கும் வரலட்சுமி! இன்ஸ்டாவில் கலக்கும் போட்டோஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் அவருடைய மூத்த மனைவி சாயா தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தந்தையைப் போலவே சிறந்த நடிகையாக காணப்படுகின்றார்.

கடந்த ஜூலை மூன்றாம் திகதி  தாய்லாந்தில் நடிகை வரலட்சுமிக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. மும்பை நகரில் ஆர்ட் கேலரி வைத்திருக்கும் பிரபல தொழில் அதிபரான நிக்கோலாய்  சத்தேவ் என்பவரை தான் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்னதான சங்கீத் மற்றும் பிற திருமண நிகழ்வுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று வரலட்சுமி நிக்கோலாவை வாழ்த்தி இருந்தார்கள்.


இந்த நிலையில், சென்னையில் திருமணத்துக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் வரலட்சுமி அவரது கணவரான நிக்கோலாய் ஆகிய இருவரும் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை தற்போது வரலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement