• Oct 26 2024

ஒரு ஹிட் கொடுத்துட்டா நீ பெரிய ஆளா? விக்னேஷ் சிவன் - பிரதீப் ஈகோ மோதல்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும்எல்ஐசிஎன்றலவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்த போது விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவேகோமாளிமற்றும்லவ் டுடேஆகிய இரண்டு ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் என்பதால் விக்னேஷ் சிவன் இயக்கும் காட்சிகளில் சில திருத்தங்கள் சொல்வதாகவும் என்னுடைய கேரக்டருக்கு இதுதான் சரியாக வரும் என்று சில காட்சிகளை மாற்றி அமைக்க சொன்னதாகவும் தெரிகிறது.

ஆரம்பத்தில் அதை ஒரு நட்பு முறை ஆலோசனையாக எடுத்துக் கொண்ட விக்னேஷ் சிவன் ஒரு கட்டத்தில் இந்த படம் தன்னுடைய படமாக இல்லாமல் பிரதீப் ரங்கநாதன் படமாக மாறி வருவதை பார்த்ததும் சிறிது அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.



இதனை அடுத்து சமீபத்தில் ஒரு காட்சி படமாக்கிக் கொண்டிருக்கும் போது இந்த காட்சியை வேற மாதிரி வைக்கலாம் என்று பிரதீப் ஐடியா கூறிய போதுஒரு படம் ஹிட் ஆகிட்டால் நீ பெரிய ஆளா? நான் எத்தனை வருடம் இந்த ஃபீல்டில் இருக்கிறேன் தெரியுமா? எனக்கே ஐடியாவா என்று ஆவேசமானதாகவும் இதனால் இருவருக்கும் இடையே ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும். இருப்பினும் படக்குழுவினர் இருவரையும் சமாதானம் செய்து அந்த காட்சிகளை படமாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த படம் முடியும் வரை இருவருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி ஒழுங்காக படம் உருவாக வேண்டுமே என்று படக்குழுவினர் தற்போது சாமியை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஒரு முக்கிய கேரக்டரில் சீமான் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement