• Jul 30 2025

சூர்யா அண்ணா நன்றி.! "கிங்டம்" ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா ஓபன்டாக்.!

subiththira / 10 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் மாஸான நடிகராக கருதப்படும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “கிங்டம்”-இன் டீசர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


இந்த டீசரின் சிறப்பு என்னவென்றால், அதில் பின்னணியில் தமிழ் ரசிகர்களின் அன்புக் குரலாய் இருக்கும் சூர்யாவின் குரல் காணப்படுவது தான்!

இந்தப் படம் விஜய் தேவரகொண்டாவின் பெரிய ஸ்கேல் படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில், இந்தப் படம் ஒரு மாநிலங்களை கடந்த மாபெரும் அரசியல்-பேராண்மை திரில்லர் என விவரிக்கப்படுகிறது. இதில் விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில், கிங்டம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ”சூர்யா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி.. நாங்க கேட்டதும் உடனே டீசருக்கு பின்னணி குரல் கொடுக்க ஓகே சொல்லிட்டாரு...” என விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement