• Dec 26 2024

ஓட்டு போட காசு வாங்குவதை விட இது பச்சை துரோகம்: விஜய்சேதுபதி

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ஓட்டு போட காசு வாங்குவதை விட இது மிகவும் பச்சை துரோகம் என்று விஜய் சேதுபதி, தேர்தல் குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தேர்தல் வந்துவிட்டாலே நாம் எல்லோரும் யார் ஜெயித்தால் நமக்கு என்ன, யாருக்கு காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம், நம்முடைய ஒரு ஓட்டு என்ன மாற்றத்தை செய்து விடப் போகிறது என்று தான் பேசிக் கொண்டிருப்போம். 

ஆனால் அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஓட்டு போடுவது நமக்காக மட்டுமல்ல நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காக என்பதை புரிந்து கொண்டு நிச்சயம் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடுவதற்கு காசு வாங்குவது எவ்வளவு பெரிய துரோகமோ, அதைவிட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது.

இதுவரை நீங்கள் அரசியல் பேசாமல் இருந்தால் பரவாயில்லை, ஆனால் இன்று முதல் அரசியல் பேசுங்கள், தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? இதற்கு முன்னால் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போட வேண்டும். 

ஓட்டு போடும் தினத்தன்று சிந்தித்து தெளிவாக நமக்கும் நம்முடைய நாட்டிற்கும் யார் சரியானவர்கள் என்பதை ஆய்வு செய்து ஓட்டு போடுங்கள் என்றும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement