பிக்பாஸ் சீசன் 9 இன் Ticket To Finale டாஸ்க் மற்றும் அதில் நடந்த போட்டியாளர்களின் நடத்தை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்த சீசனில், பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோரின் நடத்தை விமர்சனங்களை உருவாக்கியிருந்தது. கடந்த நாட்களில் நடந்த கார் டாஸ்க்கில் சாண்ட்ராவை காரில் இருந்து வெளியே தள்ளிய சம்பவம், பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன் பலரும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், நிகழ்ச்சியில் முக்கிய திருப்பம் தற்பொழுது வந்து சேர்ந்தது, புதிய ப்ரோமோ வெளியிடப்பட்ட போது.... ப்ரோமோவில் நடுவர் விஜய் சேதுபதி பார்வதி மற்றும் கம்ருதீனின் நடத்தை குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி, பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு காட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியுள்ளார். இந்த தருணம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய கனி, விஜய் சேதுபதியின் செயலுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "தெய்வம் நின்று கொள்ளும்.." என்ற பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் Fire எமோஜிகளை பதிவு செய்துள்ளனர்.
Listen News!