• Apr 07 2026

பார்வதி–கம்ருதீன் ஆட்டத்திற்கு இறுதி முடிவு.! ரெட் கார்ட் கொடுத்த விஜய் சேதுபதி.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப் பெரிய விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சியாக தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் மாறியுள்ளது. குறிப்பாக சமீப நாட்களாக நடைபெற்று வரும் Ticket To Finale டாஸ்க்கள் மற்றும் அதில் போட்டியாளர்கள் காட்டும் நடத்தை, ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

அதில் முக்கியமாக, பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோரின் செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேற்று ஒளிபரப்பான கார் டாஸ்க் நிகழ்வு, ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

அந்த டாஸ்க்கின் போது, சாண்ட்ராவை காரிலிருந்து வெளியே தள்ளிய சம்பவம் பார்வையாளர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியது.

இந்த சம்பவத்தை பார்த்த பல ரசிகர்கள், “இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியா அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் மேடையா?” என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். சமூக வலைத்தளங்களில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் குவிந்தன.


இந்த சூழ்நிலையில், தற்போது வெளியான 2-வது ப்ரோமோ ரசிகர்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ப்ரோமோவில், நிகழ்ச்சியின் நடுவர் விஜய் சேதுபதி, கம்ருதீனை கடுமையான வார்த்தைகளில் எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதாவது,“நீங்க இப்படி பேசுறது, நடக்குறது எல்லாம் பார்க்கிறவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா? இதை உங்க அக்கா வந்து பார்த்தாங்கன்னா, ‘தம்பி நீ நல்லா பண்ணப்பா’ன்னு பாராட்டு விழாவே எடுப்பாங்களா? ஒரு பொண்ணை எட்டி உதைத்த உங்க செயலை பார்த்து, ‘ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு’ன்னு உங்க அம்மாவும், அக்காவும் சொல்வாங்களா?” என்று கடுமையாக கம்மு- பாருவைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார் விஜய் சேதுபதி.

அதனைத் தொடர்ந்து,“இது எதுவுமே ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறிய விஜய் சேதுபதி, பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த தருணம் ப்ரோமோவின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இது தான் நியாயமான முடிவு என்று சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியை கமெண்ட்ஸ் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement