• Dec 25 2024

Wife Sangeetha மாதிரியே பேசுற Janany-னு Vijay Sir சொன்னாரு,-லியோ பட அனுபவத்தைப் பகிர்ந்த ஜனனி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படம் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவானதால், உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால், இதுவரை 550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.

 அதேநேரம் நெகட்டிவான விமர்சனங்களும், ட்ரோல்களும் லியோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தின. இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 


சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், லலித் குமார், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.இந்த நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்து பிக்பாஸ் பிரபலமான ஜனனி ஓபனாகக் கூறியுள்ளார்.

நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வரும் போது கொஞ்சம் அப்செட்டாகத் தான் வந்தேன். அப்பிறம் என்னோட சேர் மூலமாகத் தான் லோகேஷ் சேரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் லோகேஷ் அண்ணாவை பார்த்த போது அவர் நான் நடிக்கும் கதை குறித்து சொன்னாரு, எனக்கு விஜய் சேரோட படம் என்று தெரியும். ஆனால் என்னை நடிக்கக் கூப்பிட்டிருக்கிறாங்களே என்று அதிர்ச்சியாக இருந்திச்சு.

அதனால நான் இது கனவாக இருக்குமோஎன்ற அப்செட்டில் தான் இருந்தேன். எதுவும் சொல்லல, அப்பிறம் சேர் சொன்னாரு லோகேஷ் உனக்கு ஓகே என்றால் ஒரு வாய்ச் மெசேஜ் அனுப்ப சொல்லி, அப்பிறம் நானும் அவருக்கு தாங்ஸ் சொல்லி நடிக்கிறதுக்கு ஓகே சொன்னேன். அப்பிடித் தான் இந்த படத்தில நடிக்க வாய்ப்பு கிடைச்சிச்சு.


நான் பெஸ்ட்டே சூட்டிங் போயிருக்கும் போது அது முதல் நாளே விஜய் சேரோட தான் சூட்டிங்,எக்கு நிறைய பேர் நிற்கிறாங்க, அதெல்லாம் பார்க்க பயமா இருந்திச்சு.இருந்தாலும் லோகேஷ் அண்ணா கூட இருந்து சொல்லித் தந்ததால் நடிச்சேன். நான் செட்ல பெருசா பேசமாட்டேன். ஆனால் விஜய் சேர் வந்து பேசுவாரு,

என்னை கேட்டாரு எப்பிடி இருக்கிறீங்க எந்த ஊர் நீங்க என்று கேட்டாரு நான் ஸ்ரீலங்கா என்றேன். என் வைஃப் கூட ஸ்ரீலங்காவில் யாழ்ப்பாணம் தெரியுமா என்று கேட்டாரு.நான் தெரியும் சேர் என்றேன். என்னோட கதையைப் பார்த்து சொன்னாரு, இப்பிடித் தான் என் வைஃப் அவங்க சிஸ்ரர்ஸ் எல்லாருமே பேசுவாங்க என்று சொன்னாரு எனக்கு சந்தோசமாக இருந்திச்சு.அவர் டான்ஸ் வேற லெவல்.

அப்பிறம் பிக்பாஸ்ல உண்மையாவே சண்டை போட்டுப்பீங்களா என்று கேட்டாரு, அப்பிறம் நான் ரீல்ஸ் செய்யும் விஷயம் எல்லாம் அவருக்கு தெரியும். அப்போது என்னுடைய இன்ஸ்டாகிரம் போலோ பண்ணுறீங்களா என்று கேட்டாரு, நான் சொன்னேன். ஆமாம் சேர் என்றேன். அப்போ உங்க இன்ஸ்டாகிராமைக் காட்டுங்க என்றாரு. நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளில வந்தவுடன் செய்த ரீல்ஸ் வீடியோவைப் பார்த்து பயங்கரமாக சிரிச்சாரு.


அதைப் பார்த்து த்ரிஷா, ப்ரியா ஆனந்த் எல்லோரும் சிரிச்சாங்க. அந்த வீடியோவை நான் டிலீட் பண்ணிட்டேன்.அப்பிறம் த்ரிஷா சொன்னாங்க பிக்பாஸ்ல, நீங்க என்னை மாதிரி வரணும் என்று சொன்னதாக. அது பத்தின மீம்ஸ் எல்லாம் பார்த்திருக்கிறேன். நீங்க இருக்கும் போது பிக்பாஸ் பார்த்திருக்கிறேன். அதுக்கு பிறகு கொஞ்சம் போரிங்காக போனதால் பார்க்காமல் விட்டுட்டேன் என்று சொன்னாரு. அதைக் கேட்கும் போது ரொம்பவே சந்தோசமாக இருந்திச்சு என்றும் அந்தப் பேட்டியில் பல சுவாரஸியமான தகவல்களை ஜனனி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement