• Dec 25 2024

கோலிவுட்டில் ஜீசஸாக மாறிய இளைய தளபதி விஜய்..? இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவர் அதிக சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகராகவும் காணப்படுகின்றார். விஜய் நடிப்பில் இறுதியாக கோட் படம் வெளியானது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

கோட் படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, யோகி பாபு, மோகன், மீனாட்சி சவுத்ரி என ஏராளமான பிரபலங்கள் நடித்தார்கள். இதன் காரணத்தினாலே இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனாலும் கோட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை தான்  பெற்றது.


கோட் திரைப்படம் கிட்டத்தட்ட 450 கோடி வரை வசூலித்து இருந்தது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தமக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்ததாக இதன் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். அதன் பின்பு எச். வினோத் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார் விஜய்.


இந்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்த விஜய், இன்னும் இரண்டு படங்களோடு சினிமா துறையில் இருந்து விலகி அரசியலில் பயணிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார். அதன்படி  எச். வினோத் இயக்கும் விஜயின் 69 வது படம் தான் இறுதி படம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் கோலிவுட்ல விஜய் ஜீசஸ் ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகின்றது. அதாவது விஜயின் படம் ஒன்றை எடிட் பண்ணி அவரை கோலிவுட் ஜீசஸ் என இணையத்தில் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருவதோடு இது விஜயின் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement