• Apr 18 2026

மீனா மீது வீண் பழி போட்ட விஜயா- அண்ணாமலை உயிருக்கு காத்திருந்த ஆபத்து- Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பங்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் வீட்டு வேலை முடிந்து விட்டது என மீனா வெளியில் கிளம்பி போக, விஜயா தனது தோழி பார்வதியுடன் சாப்பிடுகின்றார். சாம்பாரை மூடாமல் சாப்பிட்டு விட்டு போகும் போது அண்ணாமலையிடம் போட்டு சாப்பிட சொல்லி விட்டு செல்கின்றார்.

அப்போது மூடாமல் சாம்பாறு இருந்த பாத்திரத்திற்குள் பல்லி விழுந்து விடுகின்றது. இது தெரியாமல் அண்ணாமலை சாப்பாட்டைப் போட்டு சாப்பிடுவதற்காக மேசையில் உட்காரும் போது, முத்து வந்து தானும் சாப்பாட்டை தானும் சாப்பிடப் போடுகின்றார். அப்போது சாம்பாறுக்குள் பல்லி விழுந்ததை காண்கின்றார்.

இதைப் பார்த்த முத்து விஜயா வந்ததும் காட்ட விஜயா மீனா மீது பழியைத் துாக்கி போடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement