• Dec 25 2024

3 மாதம் லிவிங் டுகெதர் ரிலேஷன்சிப்... ஜெயில இருக்கும் போது கல்யாண ஆசை வந்தது... TTF வாசனுக்கு கல்யாணம்... யார் அந்த லக்கி பொண்ணு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

திருமணம் செய்வதற்கு முன் மணவாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள 3 மாதம் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு கல்யாணம் செய்ய வேண்டும் என TTF வாசன் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். இந்த விடையம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


40 நாட்களாக  சிறைவாசம் வாழ்ந்த TTF வாசனுக்கு நீதி மன்றம் சில நாட்களுக்கு முன்புதான் விடுதலை வழங்கியது. பல நாட்களுக்கு பிறகு சோசியல் மீடியா பக்கம் எட்டி பார்த்த TTF வாசன் சர்ச்சையான விடையும் ஒன்றை கூற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. 


நெடு நாள் கழித்து நேரலை வந்த TTF வாசனிடம் பலரும் கேட்ட கேள்விக்கு தனக்கு 40 நாட்கள் சிறை வாசம் பல அனுபவத்தை தந்ததுதான் ஆனால் சிறை வாழ்க்கையில் தனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. கனவு கார் வாங்கிட்டு. வாழ்க்கையில் நல்லா செட்டில் ஆகிட்டு அப்புறம் தான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று இருந்தேன் ஆனால் தனக்குள் பல கனவுகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி கல்யாண ஆசை வந்து விட்டது.


இப்பொது கல்யாணம் செய்யலாம் என்று இருக்கிறேன் அதும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கிறேன் 3 மாதம் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு கல்யாணம் செய்ய வேண்டும். ஏனென்றால் லைஃப்பில் நிறைய பார்த்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே TTF வாசனின் சேட்டைகளுக்கு கடும் கோபத்தை காட்டிய நீதிமன்றம் அவரின் வாகனத்தை எரிக்க வேண்டும் எனவும் அவரின் யூடியூப் வலைத்தளத்தை முடக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஜாமினில் வெளியில் வந்து இருக்கும் இவர் காட்டும் அலப்பறைகள் காவல் துறையினரை முகம் சுளிக்க வைக்கிறது.


இந்நிலையில் அவர் வெளியிட்ட நேரலையினை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். தற்போது அவர் பேசிய லிவிங் டுகெதர் விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement