• Jan 27 2025

'ஜனநாயகன்' அரசியல் கட்சிகளை தாக்கும் படமா? ஹைலைட் பேட்டிகொடுத்த வினோத்

subiththira / 21 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகு இனிமேல் படங்களில் நடித்த போவதில்லை என்ற அதிரடி முடிவை வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் தளபதி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. ஆனாலும் தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக விஜயின் இறுதி படமாய் ஜனநாயகன் படம் தயாராகி வருகின்றது. 


தளபதி 69 ஆவது படத்தை எச். வினோத் இயக்குகின்றார். ஏற்கனவே விஜய் அரசியலில் களம் இறங்கியதால் இந்த படம் அவருடைய அரசியல் வாழ்க்கையை பற்றி தான் பேசும் என கூறப்பட்டது. இன்றைய தினம் தளபதி 69ஆவது படத்திற்கான போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தளபதி 69 வது படத்தை இயக்கும் இயக்குநர் எச். வினோத் விழா ஒன்றில் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், இந்த படம் 200% தளபதியோட படமாக தான் இருக்கும்.. கமர்ஷியலா எல்லாரும் பார்க்க கூடிய வகையில் காணப்படும். 


இதன்போது விஜய் அரசியலுக்குள் நுழைந்து உள்ளதால் இந்த படம் அரசியல் பற்றி பேசுமா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வினோத்,  இல்லை.. இந்த படத்தை கமிட் பண்ணும் போதே எல்லா வயசுல உள்ளவர்களும் பார்க்கக் கூடிய மாறி தான் எடுத்துள்ளேன்.. எல்லா அரசியல் கட்சிகளும் பார்ப்பாங்க.. எல்லாரும் பார்க்கக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும்.

இது ஒரு அரசியல் கட்சியையோ, ஒரு அரசியல்வாதியையோ, தாக்குற படமாக இல்லாமல் ஒரு லைட்டான விஷயங்களை வைத்து 100% கமர்சியல் ஆன படமாக காணப்படும். இது 100% பர்சன் தளபதியோட பாடமா இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement