• Dec 25 2024

மாட்டு வண்டில தூக்கு போட வச்சாங்க.. மேடையில் கண்கலங்கிய காளி வெங்கடின் வைரல் ஸ்பீச்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

எல்லைப் பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகின்றது என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அலங்கு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆக்சன் திரில்லர் நிறைந்த டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் முதன்மை கேரக்டரில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாய் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளது.

இந்த நிலையில், அலங்கு படத்தில் நடித்த  காளி வெங்கட் பட ப்ரோமோஷனில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடயம் வைரலாகி உள்ளது.  அதில் தனது உறவினர் வளர்த்த நாய்க்கு தானே எலி மருந்து கொடுத்த சம்பவம் பற்றியும் அதற்குப் பிறகு நடந்த விடயங்கள் பற்றியும் கண்கலங்கி பேசியுள்ளார்.

d_i_a

அதன்படி அவர் கூறுகையில், என்னுடைய பெரியப்பா வீட்டில் கருப்பன் என்ற  நாயை வளர்த்து வந்தார்கள். எனது அப்பாவுக்கு நாய் என்றால் பிடிக்காது. எனக்கு அந்த நாய் என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த நாய்க்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.


ஒருநாள் கருப்பனுக்கு  மனநிலை பாதிக்கப்பட்டு ஊரில் உள்ள 10, 15 பேரை கடித்து விட்டது. இதனால் ஊரார்கள் ஒன்று சேர்ந்து அந்த நாயை கொல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தார்கள். அந்த நாய்க்கு பக்கத்தில் கூட யாரும் போக முடியவில்லை. நாயை பிடிப்பதற்காக கார்ப்ரேஷனில் இருந்து வந்தவர்களையும் நாய் பக்கத்தில் விடவில்லை.

எனவே நான் போனால் மட்டுமே அந்த நாய் எதுவும் செய்யாது என்பதற்காக எலி பேஸ்ட் தடவின சாப்பாட்டை அந்த நாய்க்கு கொடுத்து விடுமாறு ஊரார் சொன்னார்கள். நானும் மறுக்கின்ற நிலைமையில் இல்லை. அதற்கு காரணம் இது ஊரார் தேர்ந்தெடுத்த முடிவு. அதன் பிறகு வேறு வழி இல்லாமல் அந்த உணவை நாய்க்கு கொடுத்தேன். அதுவும் சாப்பிட்டு விட்டது. இதன் போது என்னை ஒரு ஒரு பார்வை பார்த்துச்சு. அதுவே என்ன கொன்னுடுச்சு..

ஆனா அந்த நாய் ஊருக்கு வெளியில போய் ஒரு குளத்துல தண்ணி குடிச்சு தப்பிவிட்டது. ஆனாலும் ஊரார்கள் மீது வெறியாக தான் இருந்தது. மீண்டும் அந்த நாயை கொல்வதற்காக என்னிடம் வந்தார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதனால் மாட்டு வண்டியில் தூக்கு போட்டு அந்த நாயை துடி துடிக்க வைத்து கொன்று விட்டார்கள். இதனை இப்போது நினைக்கவும் கஷ்டமாக உள்ளது என்று மிகவும் கண் கலங்கி பேசியுள்ளார் நடிகர் காளி வெங்கட்.


Advertisement

Advertisement