• Dec 25 2024

மன்னிப்பு கேட்ட விஷாலின் அப்பா! கட்டியணைத்து அழுத அம்மா!

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 79 நாட்களை கடந்த நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷாலின் குடும்பத்தினர் வருகிறார்கள். விஷால் அம்மா என்று  ஓடி சென்று அழுது கட்டியனைத்துக்கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.   


பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் முதலாவது தீபக்கின் குடும்பம் பிக்பாஸ் வீட்டுக்குள் ரகசியமாக நுழைந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்கள். அடுத்ததாக மஞ்சுரியின் குடும்பத்தினர் வருகைதந்தனர்.இந்த நிலையில் அடுத்த ப்ரோமோவில் விஷாலின் குடும்பத்தினர் வருகை தருகிறார்கள். செல்லம் என்று ஒரு சத்தம் கேட்க விஷால் "மச்சான் எங்க அம்மாடா" என்று ஓடி செல்கிறார். விஷாலின் அம்மா மற்றும் அக்கா வருகிறார்கள். முதலில் உள்ளே வந்த அம்மா விஷாலை கட்டியணைத்து அழுகிறார்.


பின்னர் விஷாலின் அம்மா "நீ ஏன் அப்பா கிட்ட பேசாம இருந்த புள்ள பேசாம இருக்குனு கவலையில உன்ன பார்க்க அப்பா வரவில்லை" என்று சொல்கிறார். இதனை கேட்டு விஷால் அழுதுகொண்டிருக்கிறார். பின்னர் மீண்டும் கதவு திறக்கப்படுகிறது. அப்போது விஷாலின் அப்பா உள்ளே வருகிறார் அவரை பார்த்த சந்தோசத்தில் விஷால் கன்னத்தில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டு அழுகிறார். 


பின்னர் பேசிய விஷாலின் அப்பா "அவனோட நான் சண்டை போடுறேன் தான்,  எனக்கு சண்டை போட வேற மகன் இல்லை, அவனுக்கு நிறைய கஷ்ட்டம் கொடுத்துட்டேன் இப்ப மன்னிப்பு கேக்குறேன்" என்று கண்கலங்கி கூறியுள்ளார். பின்னர் விஷால் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Advertisement

Advertisement