சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , க்ரிஷ் படிக்கும் ஸ்கூலுக்கு மனோஜ் செல்கின்றார். இதனால் ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு மயக்கம் வருவதாக மனோஜை வீட்டிற்கு அழைக்கின்றார். இதனால் மனோஜ் மீண்டும் திரும்பி வீட்டிற்கு வருகின்றார்.
வீட்டு வாசலில் ஜீனோ நிற்க, அதற்கு கல் எடுத்து அடிக்கின்றார் மனோஜ். இதனால் நாய் அவரை கடித்து விடுகிறது. அதன் பின்பு டாக்டர் வந்து மனோஜ்க்கு ஊசி போட்டுவிட்டு நாயை நன்றாக பார்க்க வேண்டும் நாய் செத்தால் மனோஜின் உயிருக்கும் ஆபத்து என்று சொல்லிச் செல்கின்றார்.
அதன் பின் ரோகிணி என்னால் தான் உனக்கு இப்படி நடந்தது என்று சொல்லி மன்னிப்பு கேட்கின்றார். ஆனாலும் மனோஜ் மயக்கம் வருவது என்று சொன்னாயே, ஏதும் குட் நியூஸ் இருக்கா? என்று கேட்கின்றார். ஆனால் ரோகிணி உங்க அம்மாவால நான் கீழையும் நீ மேலயும் படுகிறோம் அப்போ எப்படி குட் நியூஸ் வரும் என்று கேட்கின்றார்.
இதை தொடர்ந்து மனோஜ் நாய் போலவே ஆக்சன் போட்டுக் கொண்டு இருக்கின்றார் . பின்பு முத்து வந்து வீதியில் செடி நடப் போவதாக சொல்லுகின்றார். மேலும் இதனை அம்மாவை பார்த்து தான் கற்றுக் கொண்டதாகவும் சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!