விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடுகின்ற குடும்பத் தொடரான "மகாநதி" தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சிக்கலான குடும்பக் கோணங்கள், உணர்வுபூர்வமான கதைக்களம், மற்றும் அபாரமான நடிப்புத்திறன் இவை அனைத்தும் இந்த தொடரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கச் செய்துள்ளன.
இந்த வார புரொமோவில், கதையின் முக்கியமான திருப்புமுனையில் ஒரு முக்கியமான உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. இதுவரை மனதுக்குள் அடக்கி வைத்திருந்த காவேரி, தனது கர்ப்பம் குறித்த உண்மையை தனது அம்மா சாரதாவிடம் வெளிப்படையாக கூறுகிறாள். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
மகாநதி தொடரில் காவேரி கதாபாத்திரம் உணர்வுகளால் நிரம்பிய, தியாகமும் வலி நிறைந்ததாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உணர்வுபூர்வமான எபிசொட்டைத் தொடர்ந்து, தொடரின் இயக்குநர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ஒரு புகைப்படம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், விஜய் தனது Bag உடன் சாரதா வீட்டின் முன்பாக நின்று கொண்டிருக்கும் ஒரு ஸ்டில் போஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கலக்கம் மற்றும் திகைப்பு ஆகிய அனைத்து உணர்வுகளையும் கிளப்பியுள்ளது.
இந்த புகைப்படத்தின் மூலம், விஜய் காவேரியுடன் இணைவாரா.? அல்லது புதிய கிளைமாக்ஸ் தொடர்வதற்கான ஆரம்பமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
Listen News!