விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்று தீபக்கின் மனைவி மற்றும் மகன் வந்திருந்தார்கள். அப்போது பிக் பாஸ் சொன்னதன் படி தீபக் மனைவி அருண் மீது குற்றச்சாற்றை வைத்துள்ளார். இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இன்று தரமான சம்பவம் நடந்துள்ளது தீபக் மனைவி மற்றும் மகனின் வருகையால் தீபக் ஹாப்பியாக இருக்கிறார். அப்போது பிக் பாஸ் "உங்களுக்கு இங்க இருக்குற போட்டியாளர்களிடம் என்ன முரண்பாடு இருக்கு சொல்லுங்க" என்று சொல்கிறார். அதற்கு தீபக்கின் மனைவி போட்டியாளர் அருண் குறித்து குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில்" நீங்க சத்தியாவை தனியா கூட்டிக்கொண்டு சென்று ட்ரெண்டிங்கில் இருக்குற ஹீரோ நான் என்னையே இவரு இப்படி நடத்துறாருன்னா அவரு ட்ரெண்டிங்கில் இருக்கும் போது மற்றவங்களை எப்படி ட்ரீட் பண்ணி இருப்பாரு என்று வஸ்ட்டா சொன்னிங்க. தீபக் ஓட பேஸ்னல் லைப் பற்றி உங்களுக்கு தெரியாது, நீங்க இப்படி சொன்னது எங்களுக்கு ரொம்ப ஹேட்டாச்சி என்று கூறினார். இதனை கேட்டு மற்ற போட்டியாளர்கள் அருணா இப்படி பேசினான் என்று அதிர்ச்சியாகி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Listen News!