விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள்ளேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துள்ளது.
இந்த சீரியலில் சுவாரஸ்யம் நிறைந்த கதாபாத்திரமாக ரோகிணியின் கதாபாத்திரம் காணப்படுகின்றது. அவரது வாழ்க்கையில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள், அதை மறைத்து அவர் செய்து கொண்ட திருமணம், குடும்பத்தை ஏமாற்றும் விதம் என்பன இன்னும் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்து வருகின்றது.
இந்த காரணத்தினால் ரோகிணியின் திருட்டுத்தனம் எப்போது வெளியே வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பலர் காணப்படுகின்றார்கள். ஒவ்வொரு முறையும் ரோகிணிக்கு எதிராக சம்பவங்கள் நடக்கும் போது அவர் மாட்டி விடுவார் என்ற எண்ணம் தோன்றும்.
d_i_a
ஆனாலும் அவர் அதிலிருந்து எளிதில் எஸ்கேப் ஆகி விடுவார். இது ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாக்கியும் உள்ளது. மேலும் டைரக்டர் அவரை காப்பாற்றி வருவதாகவும் கமெண்ட் பண்ணுவார்கள்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் சல்மா அருண் வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவரிடம் ரோகிணி பற்றிய சீக்ரெட் எப்போ ரீவில் ஆகும் என்று கேட்கப்பட்டது.
அதற்கு சல்மா அருண் பதில் அளிக்கையில், எங்களுக்கு அது பற்றிய எந்த ஒரு தகவலும் தெரியாது. ஏனென்றால் நாங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும்போது டைரக்டர் தரும் ஸ்கிரிப்ட்டை தான் பார்த்து நடிப்போம்.
எனக்கும் ரோகிணி எப்போது மாட்டுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. ஆனாலும் அதற்காக எந்தவொரு பிரிப்பரேஷன் எதுவும் பண்ணுவதில்லை.. அது எங்க செட்டுக்கே ஆகாது. இயல்பாகவே அந்த டைமில் என்ன நடக்கின்றதோ அதற்கு ஏற்றால் போலவே எல்லோரும் நடிக்கின்றோம் என தெரிவித்து உள்ளார்.
Listen News!