• Dec 26 2024

எப்போ பார்த்தாலும் periods concept ah- யூடியூபர் இன்பா மீது பாய்ந்தது சைபர் கிரைம் வழக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!


சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் தமக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நபர்கள் பலர் இருக்கின்றனர்.அவர்களில் பலர், மக்களுக்கு, நல்ல விஷயங்களை எடுத்துரைப்பார்கள். அதேசமயம், வேறு சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாகவும், பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையிலும் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் காதல் மற்றும் ரொமான்ஸ் குறித்த வீடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் பிரபல்யமானவர் தான் இன்பா.இவர் தொடர்ந்து மோசமான செய்கைகளோடு மோனோ ஆக்டிங் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.


இதனால் இவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த பதில் இன்பாவின்  mono-acting வீடியோக்களை பார்க்கும்‌ மாணவ, மாணவியர்கள்‌ மற்றும்‌ கல்லூரியில்‌ படிக்கும்‌ இளைஞர்களிடமும்  பாலியல்‌ தொடர்பான எண்ணங்கள்‌ ஏற்பட்டு பாலியல்‌ குற்றச்‌ செயலில்‌ ஈடுபட வாய்ப்புள்ளது.

இதனால்‌ இளைஞர்‌ சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும்‌ வகையிலும்‌, மேலும்‌ பெண்களின்‌ நாகரிகத்தை இழிவுபடுத்தும்‌ வகையில்‌ வீடியோக்களை சமூக வலைதளங்களில்‌ பதிவு செய்துள்ளார்‌.இதனால் இவரை கைது செய்கின்றோம் என்றும் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement