• Dec 26 2024

கேப்டன் விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கு எங்கே? எப்போது? முழுமையான விபரம் இதோ...

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கேப்டனாகவே விளங்கியவர் நடிகர் விஜயகாந்த். நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட இருந்ததோடு தொடர்ந்து சிகிச்சைகளையும் பெற்று வந்தார். இருப்பினும் கொரோனாத் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார். இவரின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தற்போது அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணிவரை மக்கள் சென்று அஞ்சலி செலுத்தலாம். 

இதை தொடர்ந்து, அங்கிருந்து இறுதி ஊர்வலம் ஆரம்பமாகி தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்தடையும். அங்கு மாலை 4.45 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று அக்கட்சி அலுவலகத்தின் வளாகத்திலேயே கேப்டன் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement