• Apr 04 2025

சுஷாந்த் சிங் வழக்கில் திருப்பம்..! தற்கொலைக்கு காரணம் யார்..?

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் எம். எஸ் . தோனி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவர் 2020 ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் மொத்த சினிமா உலகிற்கும் ஒரு கேள்விக்குறியாக இருந்தது.


மேலும் இவரது தந்தை சுஷாந்த் சிங்கை ரியாதான் தற்கொலைக்கு தூண்டினார் என அவரது தந்தை ஆரம்பத்தில் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரை வைத்து ராஜ்புத்துடன் உறவில் இருந்ததாகக் கூறப்படும் ரியா சக்ரவர்த்தி மற்றும் நடிகருக்கு நெருக்கமான மற்றவர்களிடமிருந்து சிபிஐ வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரித்தது சிபிஜ விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. மேலும் மற்றவர்களின் வாக்குமூலங்களையும் சிபிஐ பதிவு செய்து நடிகரின் மருத்துவப் பதிவுகளையும் சேகரித்தது.


நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட  அறிக்கையின் படி “நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை” என நீதிமன்றம் வழக்கை முடித்துள்ளது.

Advertisement

Advertisement