இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்திய நேர்காணலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்து சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கிய விக்னேஷ் சிவன், அதன் பின்னர் ‘நானும் ரௌடிதான்’ மூலம் நல்ல பெயரைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, சூர்யா உடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் சேதுபதி உடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களை இயக்கியிருந்தாலும், அவை கலவையான விமர்சனங்களையே பெற்றன. தற்போது, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘LIK’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நேர்காணலில் ‘போடா போடி’ படம் ஏன் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்று கேட்கப்பட்ட போது, அவர் தனது ஆரம்ப கால அனுபவங்களை பகிர்ந்தார். “நான் 22 வயதில் அந்த படத்தை இயக்க ஆரம்பித்தேன். ஆனால், பல தாமதங்களால் படம் வெளியாகும் போது 27 வயதாகிவிட்டது. இதே சமயத்தில் துப்பாக்கி திரைப்படத்துடன் ‘போடா போடி’ வெளியானது. அந்த மாபெரும் ஹிட்டின் முன்னால் எங்கள் படம் நிற்க முடியவில்லை.” என்றார்.
மேலும் அவர் நகைச்சுவையாக, “துப்பாக்கி படத்தில் விஜய் இடைவேளையில் 12 பேரை சுடுவார். ஆனால் உண்மையில் அவர் சுட்டது 13 பேர். அந்த 13-வது ஆள் நான் தான்.” என்று கூறி சிரிப்பை ஏற்படுத்தினார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Listen News!