• Dec 26 2024

ஜிவி பிரகாஷ் - சைந்தவியிடம் விஜய் பேச்சுவார்த்தையா? திராவிடம் -சனாதனம் ஒரு காரணமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் நேற்று பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இருவரையும் சேர்த்து வைக்க விஜய் உள்பட சில நெருக்கமான நண்பர்கள் முயற்சி செய்ததாகவும் ஆனால் அதையும் மீறி தான் இந்த பிரிவு அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் நடிகைகள் உடன் நெருக்கமாக பழகுவது சைந்தவிக்கு பிடிக்கவில்லை என்று ஒரு காரணம் கூறப்படும் நிலையில் ஜிவி பிரகாஷ் திராவிட கருத்துக்களில் ஈடுபாட்டுடன் இருப்பதை சைந்தவியின் அம்மா விரும்பவில்லை என்றும் அவர் கட்டாயப்படுத்தி தான் அமித்ஷாவை சந்திக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சனாதன கருத்துக்களை பின்பற்றுமாறு ஜிவி பிரகாஷுக்கு அவரது மாமியார் வலியுறுத்தியதாகவும் ஆனால் அதில் தனக்கு விருப்பமில்லை என்று ஜி வி பிரகாஷ் கூறிவிட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி சரியாக பேசிக் கொள்வதில்லை என்றும் இருவருக்கும் கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் இருவருக்கும் பிரச்சனை என்ற கேள்வி பற்றி ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தளபதி விஜய் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் விஜய் கூறியும் கூட இருவரும் பிரிவதில் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் ஜிவி பிரகாஷ் குடும்பத்தினர் மற்றும் ஏ ஆர் ரகுமான் குடும்பத்தினர் மீண்டும் இருவரையும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இந்த பேச்சு வார்த்தையில்; உடன்பாடு ஏற்பட்டால் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்துக்கள் மட்டுமே, இரு தரப்பினரிடம் இருந்து பிரிவுக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement