• Dec 26 2024

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணத்திற்கு நடிகர் அஜித் வருவாரா?- அடடே இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. 

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை அடுத்து நடிகர் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


மேலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகனைத் திருமணம் செய்யவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.இந்நிலையில், வருகிற 13ஆம் தேதி விமர்சையாக இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறதாம். மொத்தம் 300 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து 150 பேரும், பெண் வீட்டிலிருந்து 150 பேரும் மட்டுமே கலந்துகொள்ள போகிறார்களாம். அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ள ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணத்தில் அஜித் கலந்துகொள்வாரா என கேள்வி எழுந்துள்ளது.


அதே போல் பிரபு வீட்டாருடன் நெருங்கிய பழக கூடிய நபர்களில் ஒருவர் அஜித். இதனால் அவர் திருமணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement