• Apr 16 2026

கூட்டம் ஓட்டாக மாறுமா.? துக்க செய்தியை கேட்பது வருத்தமளிக்கிறது.. சினேகன் பகீர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தளபதி விஜய் தற்போது சினிமாவை விட்டு அரசியலுக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அவரது அரசியல் முயற்சிகள் பெரும் ஆர்வத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அண்மையில் நடைபெற்ற சில பிரச்சார நிகழ்வுகள் அவர் அரசியலில் செயற்படும் விதம் தொடர்பாக பரபரப்பான விமர்சனங்களையும், கவலையையும் உருவாக்கி உள்ளன.


கடந்த ஆண்டு கரூரில் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்தனர். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை இல்லையா? என கேள்விகளும் எழுந்தன.

அதோடு சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போதும் ஒருவர் கூட்ட நெரிசலால் உயிரிழந்தார். இதனால், பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஏற்படும் இடர்பாடுகள் மீண்டும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

இந்நிலையில், பாடலாசிரியர் மற்றும் மநீம நிர்வாகி சினேகன் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளார். 

அதாவது, “ஆர்வத்தின் மிகுதியால் செல்வதால் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படுகிறதா என்பதை விஜய் ரசிகர்கள் தான் உணர வேண்டும். பிரச்சார கூட்டங்களில் துக்க செய்திகளை தொடர்ந்து கேட்பது வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய்க்கு என்று ஒரு எழுச்சி மற்றும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த கூட்டம், ஓட்டாக மாறுமா, நாளை அவர் ஆட்சி அமைப்பாரா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார். 

இந்த கருத்துக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


Advertisement

Advertisement