• Apr 16 2026

ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த விக்னேஷ் சிவனின் காதல் பதிவு...

shali / 2 months ago

Advertisement

Listen News!

பிப்ரவரி 14ம் தேதி, உலகம் முழுவதும் காதலர் தினம் (Valentine’s Day) உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி, மலர்கள், அன்பளிப்புகள், மற்றும் சிறிய கவனிப்புகள் மூலம் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கிறார்கள். 


இந்நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமான இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்த காதலர் தின வாழ்த்து இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “நீ எதையும் பிடிக்காதே, பிறகு உன் இதயத்திற்குள் பார், நீ ஒரு உண்மையான காதலைப் பிடித்துக் கொள். உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உன்னை அன்பாக உணர வைக்கும். அந்த ஒரு நபர்... அப்போ சந்தோஷமா இரு!!

நீ ராஜாக்களை விட பணக்காரன், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவன். வாழ்க்கையில் போதுமான அளவு வென்றவன் மற்றும் பிரபஞ்சத்தால் முத்தமிடப்பட்டவன். எதையும் தாண்டி காதலில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். " என்று கூறியுள்ளார். 

இந்த பதிவில் இருந்து, காதலைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை வெளிப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதோடு, விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் எடுத்த குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்களை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ அனுபவமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement