• Apr 08 2025

‘இதயம் முரளி’ படத்தில் இணைந்த பிரபல பாடகி...!நடிப்பால் ரசிகர்களைக் கவர்வாரா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான தேர்வுகளால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் அதர்வா. இவர் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘இதயம் முரளி’ படத்திற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல பாடகி ஜோனிடா காந்தி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோனிடா காந்தி, தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு எனப்பல மொழிகளில் மென்மையான, மெலோடி பாடல்களை வழங்கி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இவர் ‘இதயம் முரளி’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்து படக்குழு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


‘இதயம் முரளி’ படம் ஒரு காதல் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜோனிடா காந்தி பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் இப்படத்தில் நடிப்பதென்பது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கின்ற வகையில் காணப்படுகிறது.

இவரது பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றியை கண்ட  நிலையில் தற்பொழுது அவர் நடிப்புத் துறையிலும் அதே அளவு வெற்றியடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதர்வாவின் காதல் கதைகள் ரசிகர்களிடம் பிடிக்கும் காணப்படும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

Advertisement