• Sep 09 2025

காசு தந்தா தான் ரிவ்யூ சொல்லுவீங்களா..? KPY பாலா வேதனை

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

சின்னத் திரையில் காமெடியனாக  காணப்பட்ட கேபிஒய் பாலா, முதன் முறையாக கதாநாயகனாக  களம் இறங்கிய திரைப்படம் தான் காந்தி கண்ணாடி. இதில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட  பலர் நடித்துள்ளார்கள்.  இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

சின்னத்திரையில் பிரபலமான பாலா மக்களுக்கு  உதவி செய்து மேலும் பிரபலமடைந்தார். இவர்  தனக்கு கிடைக்கும் வருமானத்தில்  ஏழை எளிய மக்களுக்கும்  தன்னால் இயன்ற உதவிகளை செய்கின்றார். இவருடைய செயலை பார்த்த ராகவா லாரன்ஸ் இவருடன் கைகோர்த்து பல உதவிகளை செய்து வருகின்றார். 

இதை தொடர்ந்து  பாலா கதாநாயகனாக களமிறங்கிய திரைப்படம் தான் காந்தி கண்ணாடி.  இந்த படத்திற்கு முதல் நாளில் 35 லட்சம் ரூபாய் வசூல் கிடைத்தது.  அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் அதிகரித்தது. இதுவரையில் காந்தி கண்ணாடி படத்தின் வசூல் 1.76 கோடியை  எட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 


வெள்ளித்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்த பாலா,  தனது அடுத்த அடுத்த படங்களை தேர்வு செய்யும் முறையில்தான் அவருடைய சினிமா வாழ்க்கையே அடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.  காந்தி கண்ணாடி படமும்  அதன் கிளைமாக்ஸில் பல ரசிகர்களை கண் கலங்கவும் செய்துள்ளது. 

இந்த நிலையில், காந்தி கண்ணாடி படம் தொடர்பில் கேபிஒய் பாலா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதாவது சின்ன தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும், தமிழ் சினிமாவை நாங்கள் காப்பாற்ற போகிறோம் என பேசும் சினிமா விமர்சகர்கள் யாரும் தான் நடித்த காந்தி கண்ணாடி படத்தை பற்றி விமர்சனம் செய்யாதது வேதனையாகவே உள்ளது. 

இந்த படம் நல்லா இல்லன்னு கூட சொல்லுங்க. ஆனா எங்களுடைய உழைப்பை கண்டுக்காம போகாதீங்க. காசு தந்தா தான் ரிவ்யூ சொல்லுவீங்களா? சின்ன படம் எல்லாம் எப்படி மக்கள் கிட்ட சென்று சேரும் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார். 

Advertisement

Advertisement