நடிகர் தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் தொடர்ந்து முன்னேறி வருகிறார். ராஜ்கிரணை வைத்து இயக்கிய முதல் படம் பவர் பாண்டி, அவருக்கு ஒரு சுமாரான வெற்றியைத் தந்தது. அதன்பின் ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பல படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தில் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தில் சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், தயாரிப்பாளர் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியதால் படம் தாமதமாகியது. தற்போது, அக்டோபர் 1ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இட்லி கடை இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இதற்குமுன் செப்டம்பர் 13ம் தேதி என திட்டமிடப்பட்டிருந்தது.
முந்தைய குபேரா இசை வெளியீட்டில் ரஜினி ஸ்டைலில் பேசி ட்ரோலுக்குள்ளான தனுஷ்,பன்ச் வசனங்களை பகிர்ந்தால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக இருக்கலாம். ரசிகர்கள், மீம்ஸ் உலகம் அனைத்தும் ஆர்வமாக காத்திருக்கிறது!
Listen News!