• Sep 08 2025

இயக்குநராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்...!வெளியான புதிய படத்தின் அப்டேட்..!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் தனது கனவுகளை விரிவுபடுத்தும் நோக்கில், ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ்-ஐ தொடங்கி, அதன் கீழ் முதல் திரைப்படமாக ப்ரோ கோட் எனும் படத்தை தயாரித்துள்ளார்.


இதன் தொடர்ச்சியாக, தற்போது ரவி மோகன் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவரே இயக்கும் புதிய திரைப்படம் Ordinary Man. இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தை ரவி மோகனே தயாரித்து, இயக்கி, முழுமையாக கையாள்கிறார் என்பதிலும் குறிப்பிடத்தக்கது.


ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, Ordinary Man படத்தின் புரொமோ வீடியோ செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த புரொமோவின் வெளியீடு சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு பரிசாக அமைய இருக்கிறது.

Ordinary Man திரைப்படம், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் கதை என்றும், அதில் ரசிகர்களை ஈர்க்கும் பல உணர்ச்சி ரீதியான அம்சங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement