• Sep 08 2025

மனதை மயக்கும் ‘தங்கபூவே’ பாடல் வீடியோ இன்று வெளியீடு....!ரசிகர்கள் மத்தியில் வைரல்...!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார், அவர் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

சமீபத்தில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மென்மையான காதல் பாடலான ‘தங்கபூவே’ வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இசை, பாடலாசிரியரின் வரிகள் மற்றும் காட்சிப்பதிவு ஆகிய அனைத்தும் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. குறிப்பாக அனிருத் மற்றும் பாடகர்களின் குரல் இந்த பாடலின் அழகைக் கூர்மை படுத்தியுள்ளது.


முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே விற்பனை சாதனை புரிந்த ‘மதராஸி’, தற்போது வரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. திரைப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர்.

Advertisement

Advertisement